சிகரிடிஸ் மேகமலையென்சிஸ் எனும் இனத்தினைச் சேர்ந்த புதிய வகை “வெள்ளிக் கம்பிக்காரி” வண்ணத்துப் பூச்சிகள் மேகமலை மலைப்பகுதியில் கண்டறியப் பட்டு உள்ளன.
இந்த இனமானது மேகமலைப் பகுதியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
கடந்த 33 ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கண்டறியப்பட்டு விவரிக்கப் படும் முதல் வண்ணத்துப்பூச்சி இனம் இதுவாகும்.
இதுவரை அறிவிக்கப்படாத உயிரினம் ஒன்று கடைசியாக 1990 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டது - அது யூரேமா (டெரியாஸ்) நீலகிரியென்சிஸ் (யாடா, 1990), அல்லது சஹ்யாத்ரி புல் மஞ்சள் (நீலகிரி புல் மஞ்சள்) ஆகும்.