தற்போதுள்ள mAadhaar செயலியுடன் ஒப்பிடச் செய்யும்போது, புதிய செயலியானது புதுப்பிக்கப் பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இதில் அச்சு நகலைப் பகிர வேண்டிய அவசியம் எதுவுமின்றி, ஆதார் தரவை கோரும் நிறுவனங்களுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் பகிர்வதற்கான முக அடையாள அங்கீகார அம்சமும் உள்ளது.
தங்கும் விடுதிகள், விமான நிலையங்கள் மற்றும் ஆதார் அட்டையானது ஒரு ஆவண அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படும் பிற இடங்களில், ஆதார் அட்டை அல்லது அதன் புகைப்பட நகல்களைப் பகிர்வதைத் தவிர்க்கப் பயனர்களுக்கு வேண்டி இது வாய்ப்பளிக்கும்.