புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி மற்றும் முதலீடு 2024
November 15 , 2024 10 days 45 0
இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் ஆனது ஓராண்டில் 13.5 சதவீதம் அல்லது 24.2 ஜிகாவாட் அதிகரித்து 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 203.18 ஜிகா வாட்டை எட்டியது.
இது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 178.98 GW ஆக இருந்தது.
அணுசக்தி உட்பட, மொத்தப் புதைபடிவம் சாரா எரிபொருள் திறன் ஆனது 2023 ஆம் ஆண்டில் 186.46 GW ஆகவும் இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது 211.36 GW ஆக உயர்ந்தது.
சூரிய சக்தி உற்பத்தித் துறையானது 20.1 ஜிகாவாட் (27.9 சதவீதம்) என்ற அளவில் மிக குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 72.02 ஜிகாவாட்டாக இருந்த இது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 92.12 ஜிகாவாட்டாக உயரும்.
செயல்படுத்தப்பட்ட மற்றும் ஏலம் விடப்பட்ட பல்வேறு உற்பத்தித் திட்டங்கள் உட்பட ஒருங்கிணைந்த மொத்த சூரிய சக்தி உற்பத்தித் திறன் தற்போது 250.57 ஜிகாவாட்டாக உள்ளது.
இது கடந்த ஆண்டு பதிவான 166.49 ஜிகாவாட் அளவிலிருந்து பதிவான குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 44.29 ஜிகாவாட்டாக இருந்த காற்றாலை ஆற்றலின் நிறுவப்பட்ட திறன் ஆனது 2024 ஆம் ஆண்டில் 7.8 சதவீதம் அதிகரித்து 47.72 ஜிகா வாட்டாக உயர்ந்தது.