இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் ஆனது கடந்த பத்தாண்டுகளில் 165 சதவீதம் அதிகரித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 76.38 ஜிகாவாட் (GW) ஆக இருந்த இதன் அளவானது 2024 ஆம் ஆண்டில் 203.1 GW ஆக உயர்ந்துள்ளது.
நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா உலகளவில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா காற்றாலை ஆற்றல் உற்பத்தித் திறனில் 4வது இடத்திலும், சூரிய சக்தி ஒளி மின்னழுத்த உற்பத்தி திறனில் 5வது இடத்திலும் உள்ளது.
முதன்முறையாக, புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்துப் பெறப்படும் இந்தியாவின் ஆற்றல் உற்பத்தியானது 200 GW திறனைத் தாண்டியுள்ளது.
இதில் 85.47 ஜிகாவாட் சூரிய சக்தி மற்றும் 46.93 ஜிகாவாட் மாபெரும் நீர் மின் நிலையங்கள், 46.66 ஜிகாவாட் காற்றாலை, 10.95 ஜிகாவாட் உயிரி சார் ஆற்றல் மற்றும் 5.00 ஜிகாவாட் சிறிய நீர்மின் நிலையங்கள் ஆகியவை அடங்கும்.