பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN – International Union for Consevation of Nature) அச்சுறு நிலையிலுள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியல் என்பது தாவர மற்றும் விலங்கு இனங்களின் பாதுகாப்பு நிலை குறித்த உலகளாவிய அளவிலான மிக விரிவான பட்டியலாகும்.
சுமார் 9000க்கும் அதிகமான உயிரினங்களைச் சேர்த்து மொத்த எண்ணிக்கையாக 105,732ஐக் கொண்ட சிவப்புப் பட்டியலின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த புதிய பட்டியலின் படி, 28,338 உயிரினங்கள் அழியும் நிலை அபாயத்தில் உள்ளன.
இது சமீபத்தில் வெளியான “அரசுகளுக்கிடையேயான பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் தொடர்பான அறிவியல் கொள்கை” தளத்தின் உலகளாவிய பல்லுயிர்த்தன்மை மதிப்பீட்டு எண்ணிக்கைக்கு நெருக்கமாக உள்ளது.
20 ஆஸ்திரேலிய தட்டான் இனங்கள் முதன்முறையாக மதிப்பீடு செய்யப்பட்டன.
இந்தப் புதிய பட்டியலானது நன்னீர் மற்றும் ஆழ்கடல் உயிரினங்களின் வீழ்ச்சியின் அபாயகரமான விகிதத்தை வெளிப்படுத்துகின்றது.
கடல் வாழ் இனங்களில், அவற்றின் நீளமான மூக்குப் பகுதியால் கூட்டாக ரைனோ இனங்கள் என்றறியப்படும் வெட்ஜ் மீன்கள் (wedgefishes) மற்றும் பெரிய உளுவை மீன்கள் உலகின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கடல்வாழ் மீன் குடும்பங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன.
IUCN மதிப்பிட்டுள்ள உயிரினங்களில் 50% க்கும் அதிகமான உயிரினங்கள் குறைவாக கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்ற பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 50% உயிரினங்கள் பல்வேறு அளவில் வீழ்ச்சியடைந்துக் கொண்டு இருக்கின்றன என்பது இதன் பொருளாகும்.
மொத்த மதிப்பீட்டில் 873 இனங்கள் ஏற்கனவே அழிந்து விட்டன. 6127 இனங்கள் மிகவும் அருகிய இனங்களாக உள்ளன.
2011-2020 ஆண்டு பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான உலகளாவிய யுக்திசார் திட்டத்தின் இலக்கு 12-ன் படி தற்போது அறியப்பட்டுள்ள அச்சுறு நிலையிலுள்ள இனங்களின் அழிவானது 2020 ஆம் ஆண்டுக்குள் தடுக்கப்பட வேண்டும்.