தமிழ்நாடு மாநில திட்டக் குழுவானது (SPC) புதுமைப் பெண் திட்டத்தின் முதன்மை மதிப்பீட்டினை மேற்கொண்டுள்ளது.
13,681 கூடுதல் மாணவர்கள் இந்த முன்னெடுப்பினால் பயனடைந்ததன் மூலம், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பட்டயப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் சேர்ந்தனர்.
இது 6.9 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
அவர்களில், 38.6% பட்டியலிடப்பட்டச் சாதியினர் (SC), 34.4% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), மற்றும் 24.8%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) ஆவர்.
இதன்படி, சேலத்தில் அதிகபட்சமாக 8.9% கல்லூரி மாணவர் சேர்க்கை பதிவாகி உள்ளது, அதனைத் தொடர்ந்து சென்னை 5.8%; தர்மபுரி 5.5%; திருவண்ணாமலை 5.2%; நாமக்கல் 4.8%; மற்றும் கடலூர் 4.1% ஆகியவை உள்ளன.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2,30,820 ஆக இருந்தது.
17,032 (7.38%) எண்ணிக்கையுடன், சேலம் மாவட்டம் ஆனது இத்திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயனடைந்த மாணவர்களைக் கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சுமார் 13,312 என்ற எண்ணிக்கையுடன் நாமக்கல் (5.77%); 11,915 எண்ணிக்கையுடன் தருமபுரி (5.16%); 11,468 எண்ணிக்கையுடன் சென்னை (4.97%); 11,146 எண்ணிக்கையுடன் திருவண்ணாமலை (4.83%); மற்றும் 10,777 எண்ணிக்கையுடன் கோயம்புத்தூர் (4.67%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.