TNPSC Thervupettagam

புதைபடிம எரிபொருட்களிலிருந்து சல்பர் நீக்கம்

May 5 , 2018 2267 days 776 0
  • பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருட்களிலிருந்து சல்பரை நீக்கும் 4 பாக்டீரிய மரபியற் மாற்றுருக்களை (Bacterial strains) அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (Council of Scientific & Industrial Research) தனிமங்கள் மற்றும் பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தைச் (Institute of Minerals and Materials Technology) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரிய மரபியல் மாற்றுருக்களாவன
    • ரோடோ காக்கஸ் ரோடோ கோரஸ் (Rhodococcus rhodochrous)
    • அர்த்ரோபாக்டர்ஸ் சல்பூரியோவ் (Arthrobacter sulfureou)
    • கோர்டோனியா ருப்ரோபர்டினிடா (Gordonia rubropertinita)
    • ரோடோகாக்கஸ் எரித்ரோம்போலிஸ் (Rhodococcus erythropolis)
  • புதைபடிம எரிபொருட்களின் எரிதலின் போது வெளியிடப்படுகின்ற முக்கியமான மாசுபடுத்திகளில் (pollutants) சல்பரும் ஒன்றாகும்.
  • இந்த நான்கு பாக்டீரிய மரபியற் மாற்றுருக்களானது புதைப்படிம எரிபொருட்களின் முக்கிய மாசுகலப்பு பொருளான டைபென்ஸோதியோபீன் (dibenzothiophene) எனும் ஆர்கானிக் சல்பர் சேர்மத்தை (organic sulphur compound) ஆற்றல் மூலமாக பயன்படுத்துவதால், புதைபடிம எரிபொருள் பயன்பாட்டின் போது சல்பர் உமிழ்வை இந்த பாக்டீரியா மரபியல் மாற்றுருக்கள் தடுக்கின்றன.
  • இந்த நான்கு பாக்டீரிய மரபியல் மாற்றுருக்களை பயன்படுத்தும் உயிரி-சல்பர் நீக்க செயல்முறையானது (bio-desulfurization) சுற்றுச் சூழலுக்கு உகந்த, பொருளாதார சிக்கனமுடைய செயல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்