புதைபடிவ எரிபொருள் சார்ந்த கடன் தொடர்பான அறிக்கையானது, கடன் எதிர்ப்புப் பிரச்சார நிறுவனமான டெப்ட் ஜஸ்டீஸ் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள சில பங்குதார நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகக் கடன்களைக் கொண்ட ஏழை நாடுகளானது, பணக்கார நாடுகளிடமும், தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் பெற்றக் கடன்களைத் திருப்பி செலுத்திடச் செய்வதற்காக, வருவாய் ஈட்டுவதற்கு புதைபடிவ எரிபொருட்களைத் தொடர்ந்துச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
2011 மற்றும் 2023 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட கால இடைவெளியில் அந்நாடுகளின் “வெளிநாட்டுக் கடன் செலுத்துதல் தொகையானது 150% ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த 25 ஆண்டுகளில் மிக அதிகபட்ச நிலையை எட்டியுள்ளது.
மேலும், 54 நாடுகள் இவ்வகையான கடன் நெருக்கடியில் உள்ளன.
பெருந்தொற்றின் போது இத்தகையப் பல கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக மக்களுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்கு அந்த நாடுகள் தள்ளப்பட்டன.