TNPSC Thervupettagam

புதைபடிவ எரிபொருள் சார்ந்த கடன் தொடர்பான அறிக்கை

August 27 , 2023 327 days 208 0
  • புதைபடிவ எரிபொருள் சார்ந்த கடன் தொடர்பான அறிக்கையானது, கடன் எதிர்ப்புப் பிரச்சார நிறுவனமான டெப்ட் ஜஸ்டீஸ் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள சில பங்குதார நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது.
  • அதிகக் கடன்களைக் கொண்ட ஏழை நாடுகளானது, பணக்கார நாடுகளிடமும், தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் பெற்றக் கடன்களைத் திருப்பி செலுத்திடச் செய்வதற்காக, வருவாய் ஈட்டுவதற்கு புதைபடிவ எரிபொருட்களைத் தொடர்ந்துச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  • 2011 மற்றும் 2023 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட கால இடைவெளியில்  அந்நாடுகளின் “வெளிநாட்டுக் கடன் செலுத்துதல் தொகையானது 150% ஆக அதிகரித்துள்ளது.
  • இது கடந்த 25 ஆண்டுகளில் மிக அதிகபட்ச நிலையை எட்டியுள்ளது.
  • மேலும், 54 நாடுகள் இவ்வகையான கடன் நெருக்கடியில் உள்ளன.
  • பெருந்தொற்றின் போது இத்தகையப் பல கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக மக்களுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்கு அந்த நாடுகள் தள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்