அரியலூர் நகரத்திற்கு அருகே உள்ள வாரணவாசியில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
100 ஏக்கர் அளவிலான இந்த அருங்காட்சியகம், அரியலூர் பகுதியில் டைனோசரஸ் இருந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் மற்ற ஊர்வன தொடர்புடைய இனங்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் காட்சிப் பெட்டியாக இருக்கும்.
இந்த அருங்காட்சியகத்தின் 40 ஏக்கர் அளவிலான பிரிவு, பல மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட நில உருவாக்கத்தின் அடுக்குகளைக் குறித்துக் காட்டும் சிறிய மற்றும் பெரிய திட்டுகளின் கண்காட்சியாக இருக்கும்.
ப்ரீகேம்ப்ரியன், ஜூராசிக் மற்றும் கிரிட்டாசியஸ் காலங்களின் மாதிரிகள் இதில் காட்சிப்படுத்தப்படும்.