மத்திய அரசாங்கமானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான பிரதம அமைச்சரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். (PM-STIAC - Prime Minister’s Science, Technology and Innovation Advisory Council)
இதற்குமுன் செயல்பட்டு வந்த பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் அறிவியல் சார்ந்த ஆலோசனைக் குழுவிற்குப் பதிலாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு அரசாங்கத்திற்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தலைமையில் செயல்படும்.
இக்குழு அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பானை ஆலோசனைகளை பிரதம அமைச்சருக்கு அளிக்கும்.
மேலும் இக்குழு பிரதம அமைச்சரின் அறிவியல்சார்ந்த தொலைநோக்குப் பார்வை மீதான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும்.
இக்குழுவானது முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களை வகுத்தல் மற்றும் தக்க நேரத்தில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு உதவும். இக்குழு பல்துறை தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க உதவும்.
இக்குழு நகரத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திரள்கள் உள்ளிட்ட அறிவியலில் “தனிச்சிறப்புத் திரள்” உருவாக்குவதற்கான ஆலோசனைகளை மத்திய அரசிற்கு வழங்கும்.
இக்குழுவின் தலைவர் உள்பட ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த ஒன்பது உறுப்பினர்களைத் தவிர, மேலும் 12 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
அறிவியல், தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் கல்வி தொடர்பான 11 பதவிசார் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் இக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுகின்றனர்.