TNPSC Thervupettagam

புத்தாக்க இளையோர் உயிர்தொழில்நுட்பவியலாளர் விருது

December 8 , 2018 2098 days 615 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க இளையோர் உயிர்தொழில்நுட்பவியலாளர் விருது ஐஐடி - மாண்டியின் துணைப் பேராசிரியரான டாக்டர் ரஜனீஸ் கிரிக்கு வழங்கப்படுகிறது.
  • ஜிகா வைரஸ் புரத உறை மடிப்பு மற்றும் நோய்த் தடுப்பிற்கான கண்டுபிடிப்பு மீதான புத்தாக்க கருத்தைப் பரிந்துரைத்ததற்காக டாக்டர் கிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் இவர் பல்வேறு கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கற்ற புரோட்டீன்களில் புரத மடிப்புகளின் அடிப்படைப் பிரச்சனைகளை புரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதில் தனது நிபுணத்துவத்தை நிரூபித்துள்ளார்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிர்தொழில்நுட்பத் துறையானது டாக்டர் கிரியை இவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்