2023 ஆம் ஆண்டில் புத்தொழில் நிறுவனங்கள் அதிக நிதியுதவி பெறும் நாடுகளின் உலகளாவியத் தரவரிசையில் இந்தியா நான்காவது இடத்திற்கு சரிந்தது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த நிதி வரவு பதிவாகியுள்ளது.
2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மொத்த நிதியுதவியில் 7 பில்லியன் டாலர் மட்டுமே பெறுவதன் மூலம், தற்போது அது அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் சீனா ஆகிய நாடுகளை விட பின்தங்கி உள்ளது.
2023 ஆம் ஆண்டில், அனைத்து நிலைகளிலும் நிதியுதவி குறைந்துள்ள நிலையில், கடைசி நிலை நிதியுதவி 73%க்கும் மேலாகக் குறைந்ததோடு, அதைத் தொடர்ந்து ஆரம்ப-நிலை நிதியுதவி (70%) மற்றும் தூண்டுதல்-நிலை நிதியுதவி (60%) ஆக குறைந்துள்ளது.