புத்தொழில் மேம்பாட்டிற்கு உகந்த உலகின் 10 முன்னணி நகரங்கள் – 2024
May 28 , 2024 179 days 167 0
பிட்ச்புக் நிறுவனம் ஆனது சமீபத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான அதன் உலகளாவிய துணிகர முதலீட்டுச் சூழலமைவு தரவரிசையினை வெளியிட்டது.
இது புத்தொழில் மேம்பாட்டிற்கு உகந்த உலகின் முன்னணி 50 நகரங்களைப் பட்டியல் இடுகிறது என்பதோடு மேலும், இந்த சூழல் அமைப்புகளின் மேம்பாட்டினைப் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.
சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மற்றும் சீனாவின் பெய்ஜிங் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மும்பை 32வது இடத்திலும், பெங்களூரு 34வது இடத்திலும் இடம் பெற்றதுடன், புத்தொழில் மேம்பாட்டிற்கு உகந்த உலகின் முன்னணி 50 நகரங்களில் இரண்டு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.