TNPSC Thervupettagam

புனிதத் தோப்புகளுக்குச் சட்டப் பாதுகாப்பு – இராஜஸ்தான்

December 22 , 2024 31 days 119 0
  • அனைத்து மாவட்டங்களிலும் உள்ள புனிதத் தோப்புகள் (ஓரன்கள்) கணக்கெடுப்பு மற்றும் அறிவிப்பை நிறைவு செய்யுமாறு ராஜஸ்தான் மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இராஜஸ்தானின் வனத் துறைக்கு, ஒவ்வொரு புனிதத் தோப்புக்கும் விரிவான நில சார் மற்றும் செயற்கைக்கோள் வரைபடத்தினை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.
  • இதில் ஓரன்கள், தேவ்-வான்கள், ருந்துகள் அல்லது அந்தந்தப் பகுதியில் அவை அறியப் படும் பெயரில் உள்ள அனைத்துத் தோப்புகள் அடங்கும்.
  • 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பாக 36-C பிரிவு மூலம் ஓரன் பகுதிகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
  • இந்தப் பிரிவு ஆனது ‘சமூக இருப்புக்கள்’ என்ற அறிவிப்பினை வழங்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்