வருடாந்திர புனித அந்தோணியார் திருவிழாவானது இலங்கையில் உள்ள கச்சத்தீவில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவினைச் சேர்ந்த புனித யாத்ரீகர்கள் கச்சத் தீவை அடைந்துள்ளனர்.
2400க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இந்தத் தீவை அடைந்துள்ள நிலையில், இலங்கைத் தரப்பில் இருந்து அதற்குச் சமமான எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
கச்சத்தீவு என்பது ஜாஃப்னாவுக்கு (யாழ்ப்பாணம்) அருகிலுள்ள 163 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்கள் வசிக்காத ஒரு தீவு ஆகும்.
புனித அந்தோணியார் தேவாலயம் மட்டுமே இந்தத் தீவில் அமைந்துள்ளது.
இது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு வளமிக்க இந்தியக் கத்தோலிக்க தமிழ் மீனவரால் கட்டமைக்கப்பட்டது.