இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமையார் என்பவர் நற்செய்தியைப் பரப்புவதற்காக ரோமின் எல்லைகளுக்கு அப்பால் பயணம் செய்தவர் ஆவார்.
செயிண்ட் தாமஸ் தென்னிந்தியாவில் ஒரு பகுதிக்குப் பயணம் செய்தார்.
அவர் அங்குள்ள மக்களைக் கிறித்தவர்களாக மாற்றச் செய்தோடு சோழமண்டலக் கடற்கரைப் பகுதிக்கும் சென்றார்.
கி.பி 72 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் சென்னை மயிலாப்பூரில் இவர் கொல்லப் பட்டார்.
இந்த நாள் புனித தோமையார் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப் படுகிறது.
அவர் இந்தியாவிற்குப் பணிக்காக வந்து இறங்கியதாக நம்பப்படுகின்ற இடத்திற்கு அருகில் போர்த்துகீசியர்கள் அவரது நினைவிற்காக 1523 ஆம் ஆண்டில் ஒரு கற் கோட்டையைக் கட்டினார்கள்.
ஆனால் டச்சுக் காரர்கள் 1663 ஆம் ஆண்டில் அந்தக் கோட்டையைக் கைப்பற்றி அழித்தார்கள்.