TNPSC Thervupettagam

புனைவுக் கதைக்கான பெண்கள் பரிசு

June 10 , 2019 1876 days 622 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த தயாரி ஜோன்ஸ் என்பவர் “அமெரிக்கத் திருமணம்” எனும் தனது புனைவுக் கதைக்காக புனைவுக் கதைக்கான பெண்கள் பரிசினை வென்றுள்ளார்.
  • இந்தப் புத்தகமானது இளம் ஆப்பிரிக்க அமெரிக்கருக்கு வழங்கப்பட்ட தவறான தண்டனையைப் பற்றியும் அது அவரின் திருமணத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைப் பற்றியும் விளக்குகின்றது.
  • கடந்த வருடம் புக்கர் பரிசு பெற்ற அன்னா பர்ன்ஸ் எழுதிய “மில்க் மேன்” மற்றும் முன்னாள் புக்கர் பரிசு பெற்ற பாட் பார்க்கரின் புதிய புதினமான பெண்களின் மௌனம் ஆகியவையும் இவ்விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
புனைவுக் கதைக்கான பெண்கள் பரிசு
  • உலகெங்கிலும் பெண்களால் எழுதப்படும் புனைவுக் கதைகளைப் பரந்த அளவு வாசகர்களுக்குக் கொண்டுச் சென்றுக் கொண்டாடுவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் வழங்கப்படும் இந்த பரிசானது 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • முந்தைய வருடத்தில் ஐக்கியப் பேரரசில் வெளியிடப்பட்ட மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முழு நீள அசல் புதினங்களின் பெண் எழுத்தாளர்களுக்கு வருடந்தோறும் இப்பரிசு வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்