TNPSC Thervupettagam

புயல்களை ஆய்வு செய்வதற்கான புதிய திட்டம் – நாசா

November 11 , 2021 1019 days 556 0
  • நாசா நிறுவனமானது வெப்பமண்டலப் புயல் மற்றும் இடிமின்னல்களின் போக்கு பற்றியும் வானிலை & பருவநிலை மாற்றத்தின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்கான ஒரு புதிய புவி அறிவியல் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளது.
  • இந்தத்  திட்டமானது 3 சிறிய செயற்கைக் கோள்கள் இறுக்கமான ஒருங்கிணைப்புடன் இயங்கும் ஒரு தொகுப்பாக விளங்கும் என அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
  • இது Investigation of Convective Updrafts (INCUS) என அழைக்கப்படும்.
  • இது 2027 ஆம் ஆண்டில் நாசாவின் புவிக் கிரகத்திற்கான ஒரு துணிகர முயற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்