TNPSC Thervupettagam

புயல்கள் இல்லாத அக்டோபர் மாதம் – 2020

November 11 , 2020 1480 days 666 0
  • அக்டோபர் முதல் டிசம்பர் காலப் பகுதியானது வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் புயல்கள் ஏற்படுவதற்கான உகந்த மாதங்களாக விளங்குகின்றன.
  • இந்த ஆண்டு அக்டோபர் மாதமானது எந்தவொரு புயலையும் சந்திக்கவில்லை.
  • கடல் வானிலை மாற்றங்கள் தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வங்காள விரிகுடாவில் நுழைந்து அதன் பின் இந்தியக் கடற்கரையை நோக்கி நகரும்.
  • இந்த ஆண்டு புயல் தீவிரமடைவதற்கான எந்தவொரு சூழ்நிலையும் ஏற்படவில்லை.
  • மேலும் நிலநடுக்கோட்டுப் பசிபிக் கடல் பகுதியில் வலுவற்ற லா நினா சூழ்நிலைகள் நிலவுகின்ற.
  • மேலும் மேடன் ஜுலியன் அலைவுகளின் (Madden Julian Oscillation - MJO) தாக்கமும் இங்கு காணப்படுகின்றது.
  • MJO என்பது வெப்ப மண்டலப் பகுதியின் ஊடாக கிழக்கு நோக்கி நகரும் சூறாவளி வானிலை நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
  • இது மழைப் பொழிவு, காற்று, கடல் மேற்பரப்பு வெப்ப நிலை மற்றும் மேகக் கூட்டம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
  • ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஏறத்தாழ 80 புயல்கள் ஏற்படுகின்றன.
  • இதில் 5 புயல்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் ஏற்படுகின்றன.
  • இவை இரண்டும் சேர்ந்து வட இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்படுகின்றன.
  • வட இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் சூறாவளிகள் இயற்கையில் இரு முகட்டுத் தன்மையுடையதாக உள்ளன.
  • இவை ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை (பருவ மழைக்கு முன்பு) மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை (பருவ காலத்திற்குப் பின்பு) என இரண்டு காலங்களில் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்