TNPSC Thervupettagam

புராண கிலா அகழ்வாராய்ச்சிகள்

June 4 , 2023 539 days 400 0
  • புராண கிலா அகழ்வாராய்ச்சிகள் அது மௌரியர் காலத்துக்கு முந்தையக் குடியேற்றம் பற்றியத் தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
  • இதில் கண்டுபிடிக்கப்பட்டப் பொருட்களில், பொதுவாக கி.மு. 1200 முதல் கி.மு. 600 வரையிலான காலகட்டத்தினைச் சேர்ந்த வர்ணம் பூசப்பட்ட சாம்பல் நிறப் பாத்திரங்களின் துண்டுகளும் அடங்கும்.
  • இந்தப் புதிய அகழ்வாராய்ச்சியில் இராஜபுத்திரர் காலத்தைச் சேர்ந்த 900 ஆண்டுகள் பழமையான வைகுண்ட விஷ்ணு சிலையின் எச்சப் பகுதிகளும் கிடைத்துள்ளன.
  • குப்தர் காலத்தைச் சேர்ந்த கஜ லக்ஷ்மி தேவியின் டெரகோட்டா தகடு, மௌரியர் காலத்தைச் சேர்ந்த 2,500 ஆண்டுகள் பழமையான டெரகோட்டா வளையக் கிணற்றின் கட்டமைப்பு எச்சப் பகுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • மணிகள், முத்திரைகள், செப்புக் காசுகள் மற்றும் எலும்பினால் உருவாக்கப்பட்ட ஊசி ஆகியவற்றோடு சேர்த்து, 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய சுங்க-குஷான காலத்தைச் சேர்ந்த நேர்த்தியான, நான்கு அறைகள் கொண்ட வளாகமும் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்