TNPSC Thervupettagam

புரு-ரீங் அகதிகள் ஒப்பந்தம்

January 17 , 2020 1689 days 603 0
  • இந்திய அரசு, புரு-ரீங் பிரதிநிதிகள், திரிபுரா அரசு மற்றும் மிசோரம் அரசு ஆகியவை இணைந்து புது தில்லியில் புரு-ரீங் சமுதாயத்தைச் சேர்ந்த அகதிகள் குறித்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தின் படி சுமார் 34,000 புரு அகதிகள் திரிபுராவில் குடியேற உள்ளனர்.

பின்னணி

  • 1997 ஆம் ஆண்டில் இனப் பதற்றம் காரணமாக, 30,000 புரு-ரீங் பழங்குடியினரின் 5,000 குடும்பங்கள் திரிபுராவில் தஞ்சம் கோருவதற்காக மிசோரமிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
  • அந்த அகதிகளின் குடும்பங்களுக்கு உதவுவதற்கும் அவர்களுக்கான உதவியைக் கணிசமாக அதிகரிப்பதற்கும் வேண்டி 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கமானது திரிபுரா மற்றும் மிசோரம் மாநில அரசுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • புரூ பழங்குடியினர் உள்நாட்டில் ரீங் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே இந்தப் பழங்குடியினருக்கு “புரு-ரீங்” என்ற பெயர் ஏற்பட்டது.
  • அவர்கள் இந்தியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் வாழும் பூர்வகுடி பழங்குடியினர் ஆவர்.
  • அவர்கள் கட்டூயிக் என்ற ஒரு மொழியைப் பேசுகின்றனர்.
  • திரிபுரா மாநிலத்தில் உள்ள 21 வகை பழங்குடியினங்களில் ஒன்றாகக் கருதப் படுகின்ற இந்தப் பழங்குடியினப் பிரிவானது பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்