TNPSC Thervupettagam

புரோக்சிமா செண்ட்டாரி விண்மீன்

November 8 , 2017 2572 days 976 0
  • புரோக்சிமா செண்ட்டாரி (Proxima Centauri) விண்மீனைச் சுற்றி தூசு மண்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் விண்மீன் புரோக்சிமா செண்ட்டாரி ஆகும்.
  • சிலி நாட்டில் உள்ள ஆல்மா (ALMA - Atacama Large Millimeter Array) நோக்குக்கூடத்தில் உள்ள வானியல் அளவுமானி மூலம் இது கண்டறியப்பட்டது.
  • புரோக்சிமா செண்ட்டாரி தன்னை மையமாகக் கொண்டு ஒரு விரிவான கோள்கள் அமைப்பைக் கொண்டுள்ளது என்பதை இக்கண்டுபிடிப்புக் குறிக்கிறது.
  • பூமியில் இருந்து 4 ஒளி ஆண்டுகள் தூரத்தில், தெற்கு நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்துள்ள புரோக்சிமா செண்ட்டாரி விண்மீன் செங்குறளி (Red Dwarf) விண்மீன் வகையைச் சார்ந்தது ஆகும்.
  • புரோக்சிமா செண்ட்டாரி விண்மீனை, பூமியின் அளவில் உள்ள “புரோக்சிமா செண்ட்டாரி-பி” [Proxima Centuari b] என்ற புறக்கோள் சுற்றி வருகிறது. சூரியக் குடும்பத்துக்கு மிக அருகாமையில் உள்ள புறக்கோள் புரோக்சிமா செண்ட்டாரி-பி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்