TNPSC Thervupettagam

புரோ மல்யுத்த லீக் -சுஷில் குமார்

December 26 , 2017 2397 days 766 0
  • தில்லியில் நடைபெற்ற புரோ மல்யுத்த லீக் ஏலத்தில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரரான சுஷில் குமார் அதிகபட்ச விலையான ரூ. 55 லட்சத்திற்கு டெல்லி சுல்தான்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • இதன்மூலம் அதிகபட்ச ஏல விலையைப் பெற்று  இந்தப் போட்டியின் வரலாற்றில் சுனில் குமார்  மிக அதிக விலையுயர்ந்த வீரரானார்.
  • பெண்கள் வரிசையில், ஹரியானா ஹாமர்ஸால் அணியால் 44 இலட்சத்துக்கு வாங்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த உலகச் சாம்பியன் தங்கப் பதக்க வீராங்கனையான ஹெலன் மரொலிஸ் (57 கி. எடைக்குட்பட்டோர் பிரிவு) அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • அடுத்து வரவிருக்கும் புரோ மல்யுத்த லீக்  (PWL)   போட்டியானது அதன் மூன்றாவது பதிப்பாகும். இதன் முதல் பதிப்பை ரெவன்டா மும்பை கருடாவும் இரண்டாவது பதிப்பை என்சிஆர் பஞ்சாப் ராயல்ஸ் அணியும் வென்றுள்ளது.
  • இரண்டு பதிப்புகளிலும் ஹரியானா ஹாமர்ஸ் இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால் வெற்றி இலக்கை தொடர்ந்து தவறவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்