புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் பற்றிய உலகளாவிய அறிக்கை 2024
May 24 , 2024 183 days 203 0
உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, 2024 ஆம் ஆண்டின் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் (NTD) பற்றிய உலகளாவிய அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
2021-2030 ஆம் ஆண்டு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான செயல் திட்டத்தினை செயல்படுத்துவதில் 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் மதிப்பீட்டினை இந்த அறிக்கை வழங்குகிறது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, மொத்தம் 50 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களையாவது வெற்றிகரமாக அகற்றி, 100 நாடுகளின் 2030 ஆம் ஆண்டு இலக்கை நோக்கிய பாதி பாதையினைக் கடந்ததைக் குறிக்கிறது.
5 நாடுகள் ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களை நீக்கியதற்காகவும், ஒரு நாடு இரண்டு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களை நீக்கியதற்காகவும் உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப் பட்டு உள்ளன.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஈராக் குறைந்தது ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்களை ஒழித்த 50வது நாடானது. இந்த நிகழ்வு 2030 ஆம் ஆண்டில் இலக்கினை அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட 100 நாடுகளின் இலக்கை அடைவதற்கான பாதிப் பாதையினைக் கடந்ததைக் குறிக்கிறது.
2023 ஆம் ஆண்டில் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் நோமா சேர்க்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், பொது சுகாதாரப் பிரச்சனையாக விளங்கும் உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸை நீக்கியதற்காக உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட முதல் நாடு வங்காளதேசம் ஆகும்.
இந்திய நாடானது டிராகுன்குலியாசிஸ் மற்றும் யாவ்ஸ் போன்ற புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் இல்லாத நாடாக சான்றிதழ் பெற்றது.