மார்பகப் புற்றுநோயைக் கண்டறியக் கூடிய ஒரு வெப்பக் கண்காணிப்பு அங்கி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அங்கியானது நோயறிதலுக்கு உட்படுத்தப்படும் நபரினால் ஒரு சில நிமிடங்களுக்கு அணியப்படுகின்றது. இதனால் வெப்பக் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் புற்றுநோயைக் கண்டறியும்.
இது “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் முரட்டா என்ற ஜப்பானிய உற்பத்தி நிறுவனத்தினால் இந்தியாவில் தயாரிக்கப்பட விருக்கின்றது.