TNPSC Thervupettagam

புற்றுநோய் எதிர்ப்பு காளான்

May 8 , 2019 2030 days 843 0
  • தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு காளான் வகையிலிருந்து புற்றுநோய்ப் பொருட்களைப் பிரித்தெடுப்பதற்காக காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • இது மதராஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் வெங்கடேசன் கவியரசன் மற்றும் அவரது மாணவரான முனைவர் பட்டத்திற்கு முயலும் ஜெ. மஞ்சுநாதன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • லென்டினஸ் டியூபர்ரெஜியம் என்பது அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட காளான் வகையாகும்.
  • இந்தக் காளானில் உள்ள 2 உயிர்ப்புள்ள பொருள்கள் (LT1 மற்றும் LT2) புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
  • 1970 ஆம் ஆண்டுகளில் “லென்டினஸ் எடோபீஸ்” என்ற ஒரு ஜப்பானிய காளான் வகையானது புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளை வெளிப்படுத்துகிறது என்று உறுதி செய்யப்பட்டது.
  • பின்னர் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினரால் (Food and Drug Administrator - FDA) இதைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பொதுவான காளான் வகைகள்
  • திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளூர் காய்கறி சந்தைகளில் “அரிசிக் காளான்” (டெர்மிடோமைசெஸ் மைக்ரோகார்பஸ்) மற்றும் “புற்றுக் காளான்” (டெர்மிடோமைசெஸ் ஹெய்மி) ஆகியவை விற்கப்படுகின்றன.
  • கன்னியாகுமரி வனங்களில் வாழும் காணிப் பழங்குடி இன மக்கள், தங்களின் அன்றாட உணவில் காளான்களைப் பயன்படுத்துகின்றனர் என்று அறியப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்