தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு காளான் வகையிலிருந்து புற்றுநோய்ப் பொருட்களைப் பிரித்தெடுப்பதற்காக காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது மதராஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் வெங்கடேசன் கவியரசன் மற்றும் அவரது மாணவரான முனைவர் பட்டத்திற்கு முயலும் ஜெ. மஞ்சுநாதன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
லென்டினஸ் டியூபர்ரெஜியம் என்பது அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட காளான் வகையாகும்.
இந்தக் காளானில் உள்ள 2 உயிர்ப்புள்ள பொருள்கள் (LT1 மற்றும் LT2) புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
1970 ஆம் ஆண்டுகளில் “லென்டினஸ் எடோபீஸ்” என்ற ஒரு ஜப்பானிய காளான் வகையானது புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளை வெளிப்படுத்துகிறது என்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினரால் (Food and Drug Administrator - FDA) இதைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பொதுவான காளான் வகைகள்
திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளூர் காய்கறி சந்தைகளில் “அரிசிக் காளான்” (டெர்மிடோமைசெஸ் மைக்ரோகார்பஸ்) மற்றும் “புற்றுக் காளான்” (டெர்மிடோமைசெஸ் ஹெய்மி) ஆகியவை விற்கப்படுகின்றன.
கன்னியாகுமரி வனங்களில் வாழும் காணிப் பழங்குடி இன மக்கள், தங்களின் அன்றாட உணவில் காளான்களைப் பயன்படுத்துகின்றனர் என்று அறியப்படுகின்றது.