TNPSC Thervupettagam

புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் புதிய அணுகுமுறை

September 18 , 2023 306 days 329 0
  • இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) அறிவியலாளர்கள் புற்றுநோய் செல்களை, குறிப்பாக திடமான கட்டியை உருவாக்குகின்றச் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.
  • தங்கம் மற்றும் தாமிர சல்பைடு ஆகியவற்றால் செய்யப்பட்ட கலப்பின நுண் துகள்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இது வெப்பத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது என்பதோடு அது ஒலி அலைகளைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டறியும் திறன் கொண்டது.
  • இந்தக் கலப்பின நுண் துகள்கள் ஒளி வெப்பம், ஆக்ஸிஜன் எதிர்வினைக் கூறுகளின் உற்பத்தி மற்றும் சேர்ப்பில் உள்ள சமநிலையின்மை மற்றும் ஒளிச்சேர்க்கை பண்புகளைக் கொண்டுள்ளன.
  • இந்தக் கலப்பின நுண் துகள்கள் ஒளியை உறிஞ்சி வெப்பத்தை உருவாக்கி புற்று நோய் செல்களை அழிக்கின்றன.
  • இந்த நுண் துகள்கள் உயிரணுக்களுக்கு நச்சுத் தன்மையை ஏற்றும் வகையிலான ஒற்றை ஆக்ஸிஜன் அணுக்களையும் உருவாக்குகின்றன.
  • மேலும், இந்த நுண் துகள்கள் புற்றுநோயைக் கண்டறிவதில் உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
  • தற்போதுள்ள CT மற்றும் MRI ஊடறிதல் போன்ற முறைகளுக்கு அவற்றின் ஆய்வுப் படங்களைப் புரிந்து கொள்வதற்கு பயிற்சி பெற்ற கதிரியக்க வல்லுநர்கள் தேவை.
  • ஆனால், இந்த துகள்களின் ஒளிச்சேர்க்கை பண்புகள் உயர் தெளிவுத் திறனுடன் கூடிய சிறந்த ஆய்வுப் படங்களை வழங்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்