புற்றுநோய் செல்களை ஒரே நேரத்தில் கண்டறிந்து அழிக்கும் கார்பன் நானோ பொருட்கள்
November 14 , 2018 2203 days 666 0
IIT-ரூர்க்கியின் அறிவியலாளர்கள் புற்றுநோய் செல்களை ஒரே நேரத்தில் கண்டறியவும் அழிக்கவும் கூடிய ஒளிரும் கார்பன் பொருளை உருவாக்கியுள்ளனர்.
இந்த நானோ அளவிலான (10-9 மீட்டர்) கார்பன் பொருட்கள் புற்றுநோய் செல்களை கண்டறியும் தன்மை மற்றும் சிகிச்சையளிக்கும் தன்மை ஆகியவற்றுக்கான முகவர்களாக செயல்படும்.
இவை ரோஸ் பெரிவிங்கிள் தாவர இலையிலிருந்து பிரித்தெடுக்கப் பட்டுள்ளது.
இந்த ஆய்வானது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB - Science and Engineering Research Board) மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையால் (DBT - Department of Biotechnology) ஆதரிக்கப்பட்டது.