ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான புற்று நோய்களையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
ஏனென்றால் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகள் மக்களிடையே நிதி நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. பலர் புற்றுநோய் சிகிச்சை பெறாமலேயேச் செல்ல வேண்டியிருக்கின்றது.
இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகவும் பொதுவான நோய் புற்று நோயாகும்.
இந்தியாவில் காணப்படும் மிகவும் பொதுவான புற்றுநோய் வகை நுரையீரல் புற்று நோய் வகையாகும். இதற்கு அடுத்து மார்பகப் புற்று நோய், வாய்ப் புற்று நோய் ஆகியவை காணப்படுகின்றன.