TNPSC Thervupettagam

புலம்பெயரும் மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சி

July 27 , 2022 725 days 385 0
  • மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சி இனமானது, சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்கள் அடங்கிய சிவப்பு நிறப் பட்டியலில் 'அழியும் நிலையில் உள்ள உயிரினமாக' வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா முழுவதும் சுமார் 4,000 கிலோமீட்டர் வரை பயணம் செய்கிற இது மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சியின் ஒரு துணை இனமாகும்.
  • ராக்கி மலைகளுக்கு மேற்குப் பகுதியில் வாழும் மேற்கத்திய மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கையானது, 99.9 சதவீதம் குறைந்துள்ளது.
  • 1980 ஆம் ஆண்டுகளில் 10 மில்லியனாக இருந்த இவற்றின் எண்ணிக்கையானது, 2021 ஆம் ஆண்டில் 1,914 ஆக குறைந்துள்ளது.
  • கிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இடம் பெயர்கின்ற கிழக்கு மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கையும் 1996-2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்து 84 சதவீதம் வரை குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்