TNPSC Thervupettagam

புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் தொடர்பான திட்டமிடல் ஆணையம்

April 9 , 2025 11 days 94 0
  • மாநிலத் திட்ட ஆணையம் (SPC) நடத்திய ஆய்வில், புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது.
  • அவர்களில் சுமார் 53% பேர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள்.
  • கட்டுமானத் துறையில் உள்ள பெரும்பாலான புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
  • உற்பத்தித் துறையில், அவர்களில் பாதி பேர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள்.
  • சேவைத் துறையில், அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வரையில் வேலை செய்கிறார்கள்.
  • இதில் கணக்கெடுக்கப்பட்டத் தொழிலாளர்களில் சுமார் 84% பேர் எந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் ஏதும் இல்லாமல் வேலை செய்கிறார்கள்.
  • வருங்கால வைப்பு நிதி, சுகாதாரக் காப்பீடு மற்றும் ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு போன்ற எந்த சமூகப் பாதுகாப்பு சலுகைகளையும் அவர்கள் பெறுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்