TNPSC Thervupettagam

புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்த பங்காளர்கள் மாநாடு

February 23 , 2020 1740 days 814 0
  • புலம்பெயர்ந்த (இடம்பெயர்ந்த) வன விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் (conservation of migratory species of wild animals - CMS) 13வது பங்காளர்கள் மாநாடானது (COP-13) இந்தியாவால் குஜராத்தில் உள்ள காந்திநகரில் நடத்தப்பட்டது.
  • இந்தியா முதன்முறையாக இந்த மாநாட்டை நடத்தியது.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள், “புலம்பெயர்ந்த இனங்கள் கிரகத்தை இணைக்கின்றன, நாம் அவற்றை வரவேற்கிறோம்” என்பதாகும்.
  • CMSன் COP-13க்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னம் இந்தியக் கானமயில் ஆகும்.

Gibi (கிபி)

  • இந்த மாநாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னமான இந்தியக் கானமயில் ஆனது ‘கிபி’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்பு நிறப் பட்டியலில் இந்தியக் கானமயில் ஆனது “மிகவும் அருகி வரும் இனமாகப்” பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த இனத்திற்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் மிக உயர்ந்த பாதுகாப்பு அங்கீகாரமானது (அட்டவணை Iல் பட்டியலிடப் பட்டுள்ளது) வழங்கப் பட்டுள்ளது.

விலங்குகள் தொடர்பான கலாச்சாரம்

  • எண்ணெய்த் திமிங்கலம் மற்றும்   மனிதக் குரங்கு ஆகியவை அந்த இனங்களின் கலாச்சாரத்தின் அடிப்படையில் பாதுகாப்பதற்காகத் திட்டங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.
  • இதுபோன்ற முன்மொழிவு உலகில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.

உயிர் பன்முகத் தன்மை

  • புலம்பெயர்ந்த உயிரினங்களின் 13வது மாநாடானது உயிர் பன்முகத் தன்மை குறித்து நடத்தப்பட்ட முதலாவது சந்திப்பாகும்.
  • இந்த மாநாடானது புலம்பெயர்ந்த இனங்கள் மீதான உள்கட்டமைப்பின் தாக்கங்களைத் தணிக்கக்கூடிய வழிகாட்டுதல் கூறுகளைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பரிசீலிக்கின்றது.
  • இதுவரை, பெரிய பாலூட்டிகளுக்கான உள்கட்டமைப்பு அச்சுறுத்தல்கள் மத்திய ஆசியப் பாலூட்டிகளின் முன்முயற்சியினால் நிர்வகிக்கப்பட்டன.
  • CMS வழிகாட்டுதல்கள் தற்போது நீருக்கடியில் ஏற்படும் இடர்ப்பாடுகளின் (இரைச்சல்கள்) மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
  • இது உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான அச்சுறுத்தல்கள் மீது கவனம் செலுத்துவதில்லை.
  • இந்த மாநாட்டின் போது புலம்பெயர்ந்த உயிரினங்களில் பூச்சிகள் வீழ்ச்சியடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்முறையாக விவாதிக்கப்பட இருக்கின்றது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்மொழியப்பட்ட EUROBATS என்ற ஒப்பந்தமானது பூச்சி குறைதலை மையமாகக் கொண்ட இதே வகையைச் சேர்ந்த ஒரு ஒப்பந்தமாகும்.

தொலைநோக்குப் பார்வைத் திட்டம் (2020-2030)

  • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது நாட்டில் சுற்றுச்சூழல் அமைப்புகள், வாழ்விடங்கள், பறவைகள் பன்முகத் தன்மை மற்றும் இயற்கைக் காட்சிகளைப் பாதுகாப்பதற்காக தொலைநோக்குப் பார்வைத் திட்டத்தை (2020-2030) தொடங்கியுள்ளது.
  • இந்த வரைவின் படி, இந்தியாவில் 1,317 பறவை இனங்கள் உள்ளன.
  • இவற்றில் 72 இனங்கள் மிகப் பரவலாகப் பரவியும் 100 இனங்கள் அச்சுறுத்தல் நிலையிலும் 17 இனங்கள் அருகி வரும் நிலையிலும் 63 இனங்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையிலும் 20 இனங்கள் ஆபத்தான நிலையிலும் உள்ளன.
  • சுமார் 270 வகையான பறவையினத் தொகுதிகள் “அரிய” வகையின் கீழ் வருகின்றன.

புலம்பெயர்ந்த பாலூட்டிகளின் உள்கட்டமைப்பு

  • இந்த மாநாட்டின் செயல் திட்டத்தில் புலம்பெயர்ந்த பாலூட்டிகளின் உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்கள் இருக்கின்றன.
  • இந்த உச்சி மாநாட்டில் கோபி கரடி, பாரசீக சிறுத்தை மற்றும் யூரியல் விலங்கு ஆகிய புலம்பெயர்ந்த பாலூட்டிகள் குறித்து கவனம் செலுத்தப் படுகின்றன.
  • இந்த உச்சி மாநாடானது கங்கை நதி ஓங்கில், இந்தியக் கானமயில் மற்றும் ஆசிய யானைகள் ஆகியவற்றிற்கு பல்லுயிர்ப் பாதுகாப்பை வழங்க இருக்கின்றது.
  • கோபி கரடியானது பழுப்புக் கரடியின் துணை இனமாகும். இது மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் காணப்படுகின்றது.
  • பாரசீக சிறுத்தைகள் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் காணப்படுகின்றன.
  • யூரியல்கள் என்பது மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில், அதாவது கஜகஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் காணப்படும் காட்டு ஆடுகளாகும்.
  • 2020 ஆம் ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலகளாவிய விவாதக் குழுக்களால் "சிறந்த ஆண்டு" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது 21 நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அவற்றின் குறிக்கோள்களை முன்னிலைப்படுத்த மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • CMSன் COP-13 மாநாட்டோடு இந்தியா “பல்லுயிர் பெருக்கத்தின் சிறந்த ஆண்டை” அனுசரிக்கின்றது.
  • இந்தியாவும் நார்வேயும் 2020 - 30 ஆம் பத்தாண்டை "காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விரைவான நடவடிக்கைகளின் பத்தாண்டு" என்று அறிவித்துள்ளன.

"ஆபத்தான நிலையில் உள்ள இடப்பெயர்வு இனங்கள்"

  • CMSன் COP 13 மாநாட்டில் ஆசிய யானை, இந்தியக் கானமயில் மற்றும் வங்காள வரகுக் கோழி ஆகியவை "ஆபத்தான நிலையில் உள்ள இடப்பெயர்வு இனங்கள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்திய யானையை “தேசியப் பாரம்பரிய விலங்காக” இந்தியா அறிவித்துள்ளது.
  • இது வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972ன் அட்டவணை Iன் கீழ் விலங்குகளுக்கு மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பை வழங்குகின்றது.

அடுத்து நடைபெற இருக்கும் உச்சி மாநாடுகள்

  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐ.நா உச்சி மாநாடும் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ஐ.நா. பல்லுயிர் மாநாடும் நடைபெற இருக்கின்றன.
  • இந்த சிறந்த ஆண்டில், காலநிலை, பெருங்கடல், பாலினம், நீருக்கடியிலான வாழ்வு மற்றும் நிலத்தில் வாழும் உயிர்கள் ஆகியவற்றின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன.
  • பெய்ஜிங் செயல் திட்டமானது 2020 ஆம் ஆண்டில் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.
  • இது 1995 ஆம் ஆண்டில் பெண்கள் தொடர்பான நான்காவது ஐக்கிய நாடுகளின் உலக மாநாட்டில் வடிவமைக்கப்பட்டது.
  • COP 25ல் குறிப்பிடப்பட்ட இலக்குகளின் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டின் COP26 ஆனது 2020 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
  • நீடித்த போக்குவரத்து குறித்த முதலாவது உலகளாவிய போக்குவரத்து மாநாடானது 2020 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.
  • உயிர் பன்முகத் தன்மைக்கான உத்திசார் திட்டம் – 2011 - 20 ஆனது 2020 ஆம் ஆண்டில் முடிவுக்கு வருகின்றது.
  • இது 2010 ஆம் ஆண்டில் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமானது 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரான்சின் மார்சேயிலியில் உலகப் பாதுகாப்பு மாநாட்டை நடத்த உள்ளது.
  • இது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படுகின்றது.
  • ஐ.நா.வின் இரண்டாவது பெருங்கடல் மாநாடானது 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.
  • முதலாவது மாநாடு 2017 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் நடைபெற்றது.
  • 2020 ஆம் ஆண்டானது உயிர் பன்முகத்தன்மை செயல் திட்டங்களையும் நிறைவு செய்ய இருக்கின்றது.
  • இது பாலைவனமாக்கலுக்கு எதிரான போராட்டத்தைக் குறிக்கின்ற பாலைவனமாக்கலுக்கான பத்தாண்டையும் உள்ளடக்கியுள்ளது.
  • பாலைவனமாக்கலை எதிர்த்து போராடுவதற்காக ஐ.நா. ஒப்பந்தத்தால் இது குறிக்கப்பட்டுள்ளது.

CMS மற்றும் இந்தியா

  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் உள்ள ஒரு சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்.
  • இது புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கான ஒப்பந்தம் அல்லது பான் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • ஜெர்மனியின் பான் நகரில் 1979 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தமானது 1983 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • இதன் தலைமையகம் ஜெர்மனியின் பான் நகரில் உள்ளது.
  • 1983 ஆம் ஆண்டு முதல் இந்தியா CMSல் உறுப்பினராக இருந்து வருகின்றது.
  • சைபீரியக் கொக்குகள் (1998), கடல் ஆமைகள் (2007), கடல் பசுக்கள் (2008) மற்றும் வேட்டைப் பறவைகள் (2016) ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து CMS உடன் சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியத் துணைக் கண்டமானது முக்கியமான பறவைகள் பறக்கும் பாதை வலையமைப்பின் அதாவது, மத்திய ஆசிய ஃப்ளைவேயின் (CAF - Central Asian Flyway) ஒரு பகுதியாக விளங்குகின்றது.
  • பல புலம்பெயர்ந்த விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றிற்கு இந்தியா ஒரு தற்காலிக வாழ்விடமாக விளங்குகின்றது.
  • இவற்றில் அமுர் வல்லூறு, வரித்தலை வாத்து, கருப்பு கழுத்து கொக்குகள், கடல் ஆமைகள், கடல் பசுக்கள், கூனல் முதுகுத் திமிங்கலங்கள் ஆகியவை முக்கியமானவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்