TNPSC Thervupettagam

புலம்பெயர்வு மற்றும் மேம்பாடு குறித்த விரிவான அறிக்கை 2024

July 6 , 2024 144 days 200 0
  • 2023 ஆம் ஆண்டில் 7.5 சதவீதத்தில் இருந்த இந்தியாவின் பண வரவு ஆனது, 2024 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாக பாதியாக குறைந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வலுவான தொழிலாளர் சந்தைகளினால் 120 பில்லியன் டாலர் மதிப்பிலான பண வரவினை இந்தியா பெற்றது.
  • உலக வங்கியின் கூற்றுப்படி, பண வரவு ஆனது 2024 ஆம் ஆண்டில் 124 பில்லியன் டாலராகவும், 2025 ஆம் ஆண்டில் 129 பில்லியன் டாலராகவும் பெறப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • அதிகப் பண வரவினைப் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து மெக்சிகோ (66 பில்லியன் டாலர்), சீனா (50 பில்லியன் டாலர்), பிலிப்பைன்ஸ் (39 பில்லியன் டாலர்), பாகிஸ்தான் (27 பில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன.
  • புலம்பெயர்ந்தோர்களின் தாயகமாக முதலிடத்தில் இந்தியாவும் (18.7 மில்லியன்), அதைத் தொடர்ந்து உக்ரைன் (11.9 மில்லியன்), சீனா (11.1 மில்லியன்), மெக்சிகோ (11 மில்லியன்), மற்றும் வெனிசுலா (8.9 மில்லியன்) ஆகிய நாடுகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்