புலம்பெயர்வு மற்றும் மேம்பாடு குறித்த விரிவான அறிக்கை 2024
July 6 , 2024 144 days 199 0
2023 ஆம் ஆண்டில் 7.5 சதவீதத்தில் இருந்த இந்தியாவின் பண வரவு ஆனது, 2024 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாக பாதியாக குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வலுவான தொழிலாளர் சந்தைகளினால் 120 பில்லியன் டாலர் மதிப்பிலான பண வரவினை இந்தியா பெற்றது.
உலக வங்கியின் கூற்றுப்படி, பண வரவு ஆனது 2024 ஆம் ஆண்டில் 124 பில்லியன் டாலராகவும், 2025 ஆம் ஆண்டில் 129 பில்லியன் டாலராகவும் பெறப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதிகப் பண வரவினைப் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து மெக்சிகோ (66 பில்லியன் டாலர்), சீனா (50 பில்லியன் டாலர்), பிலிப்பைன்ஸ் (39 பில்லியன் டாலர்), பாகிஸ்தான் (27 பில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன.
புலம்பெயர்ந்தோர்களின் தாயகமாக முதலிடத்தில் இந்தியாவும் (18.7 மில்லியன்), அதைத் தொடர்ந்து உக்ரைன் (11.9 மில்லியன்), சீனா (11.1 மில்லியன்), மெக்சிகோ (11 மில்லியன்), மற்றும் வெனிசுலா (8.9 மில்லியன்) ஆகிய நாடுகளும் உள்ளன.