புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் முதல் நாடாக நேபாளம்
September 30 , 2018 2249 days 670 0
இயற்கைக்கான உலகளாவிய நிதி (WWF – World Wide Fund for Nature) என்ற அமைப்பின் Tx2 என்ற திட்டத்தின் படி பத்தாண்டுக் காலத்தில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் உலகின் முதல் நாடாக நேபாளம் உருவெடுத்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்குள்ளாக உலகம் முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க Tx2 என்ற திட்டம் எண்ணுகிறது.
2009 ஆம் ஆண்டில் இருந்த 121 புலிகள் என்ற எண்ணிக்கையில் இருந்து தற்பொழுது நேபாளத்தில் 235 காட்டுப் புலிகள் உள்ளன என மதிப்பிடப் பட்டிருக்கின்றது.
புலிகள் பாதுகாப்பிற்காக உத்தரவாதமளிக்கப்பட்ட நிர்ணயங்கள் என்ற சான்றளிப்புத் திட்டத்தின்படி (Conservation Assured Tiger Standards - CA|TS) புலிகள் வாழ்விடப் பகுதிகளை மேலாண்மை செய்வதில் உலகத் தரத்தை அடைந்த முதல் நாடு நேபாளம் ஆகும்.
இத்திட்டம் 2010ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் இயற்கைக்கான உலகளாவிய நிதி என்ற அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டது.