TNPSC Thervupettagam

புல்வாய் இனங்களின் கணக்கெடுப்பு

July 23 , 2022 729 days 386 0
  • ஆந்திரப் பிரதேச மாநில வனவிலங்குத் துறையானது புல்வாய் இனங்கள் பற்றிய முதல் கணக்கெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இது தௌலேஸ்வரம் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகள் இடையே, கோதாவரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள உள்ள தீவுப் பகுதிகளில் நடத்தப்பட்டது.
  • இந்தியப் புல்வாய் ஆனது ஒரு மறிமான் இனமாகும்.
  • தற்போது உயிருடன் உள்ள மறிமான் இனத்தினைச் சேர்ந்த ஒரே ஒரு உயிரினம் இதுவாகும்.
  • சிறுத்தைப் புலிக்கு அடுத்தபடியாக உலகின் அதிவேக விலங்காக இது கருதப் படுகிறது.
  • இது IUCN அமைப்பின் சிவப்பு நிறப் பட்டியலில் குறைந்த அளவே கவனம் செலுத்தப் படும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலத்தின் பிஷ்னோய் சமூகத்தினர் புல்வாய் இனங்களின் பாதுகாப்பு முயற்சிகளுக்காக வேண்டி உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்