2018 ஆம் ஆண்டிற்கான புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டில் (Bloomberg Billionaires Index 2018) 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து (Net worth) மதிப்பினைக் கொண்டு இந்தியாவின் மிகவும் பணக்கார நபராக ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார்.
புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் படி, முகேஷ் அம்பானி மூன்றாவது பணக்கார ஆசியராவார்.
2018-ஆம் ஆண்டிற்கான புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டில், உலகினுடைய 500 பணக்கார நபர்கள் பட்டியலில் 24 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
சீனாவின் மின்-வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக்மா ஆசியாவின் முதல் பணக்கார நபராவார். இவருடைய நிகர சொத்து மதிப்பு2 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
அவரைத் தொடர்ந்து ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக டென்சென்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான போனி மா உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
உலக அளவில் 121 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்பினைக் கொண்டு உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெஸோஸ் உள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரான பில்கேட்ஸ்4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்பினைக் கொண்டு உலகளவில் இரண்டாவது இடத்திலும், 85.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்பினைக் கொண்டு வாரன் பப்பெட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.