புளூவாக்கர் 3 என்ற சோதனை செயற்கைக்கோள் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது.
இது கேனிஸ் மைனர் (சிறிய ஞமலி) மற்றும் எரிடானஸ் ஆகிய 89 விண்மீன் திரள்களில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களைப் போல பிரகாசமாக உள்ளது.
புளூவாக்கர் 3 செயற்கை கோள் ஆனது, 693 சதுர அடி அளவிலானது.
இது விண்வெளியில் இருந்து ஆற்றலை உருவாக்குவதற்கும் மற்றும் கைபேசிகளுக்கு நேரடியாக அகலப்பட்டை அலைவரிசை இணைப்பினை வழங்குவதற்கும் அதன் மாபெரும் படிநிலை வரிசை கட்டமைப்பு அலைவாங்கியினைப் பயன்படுத்துகிறது.
இதன் பிரகாசம் ஆனது புவியில் அமைந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்தும் வானியலாளர்களுக்கு இரவு வானத்தைப் பார்ப்பதைக் கடினமாக்குகிறது.