TNPSC Thervupettagam

புழுங்கல் அரிசி விவகாரம்

April 23 , 2022 821 days 371 0
  • ஒரே மாதிரியான நெல் கொள்முதல் கொள்கையை பின்பற்றக் கோரி தெலுங்கானா மாநில  முதல்வர் K. சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் புது தில்லியின் தெலுங்கானா இல்லத்தில் போராட்டம் நடத்தினர்.
  • தெலுங்கானா மாநிலம் அதிகளவில் உற்பத்தி செய்யும் புழுங்கல் அரிசியை உபரி அளவில் கொள் முதல் செய்வதை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து இந்தப் போராட்டமானது நிகழ்த்தப்பட்டது.
  • புழுங்கல் அரிசிக்கான தேவை குறைவாக இருப்பதால், அதனை அதிகளவில் கொள் முதல் செய்து பணத்தை வீணடிக்க இயலாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
  • புழுங்கல் அரிசி என்பது ஆலையில் பிரித்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, நெல்லாக இருக்கும் போதே வேக வைக்கப் பட்ட அரிசியைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்