ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் உலகக் கோப்பை ஹாக்கியை முன்னிட்டு தலைநகரத்தை முழுவதும் வை-பை பொருத்தப்பட்டுள்ள நகரமாக மாற்றுவதற்கு வேண்டி “புவனேஸ்வர் மே வைபை” என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
இது ஆரம்பத்தில் 275 அணுகும் மையங்களுடன் செயல்படுத்தப்பட்ட 100 ஹாட் ஸ்பாட் (Hot Spots/ தகவல் பரப்பு தளங்கள்) மையங்களைக் கொண்டிருக்கும்.
படிப்படியாக 1800 அணுகும் மையங்களுடன் 518 என்ற எண்ணிக்கைக்கு இந்த ஹாட் ஸ்பாட் மையங்கள் அதிகப்படுத்தப்படும்.
இந்த வலையமைப்பின் மூலம் அரசு சேவைகளை குடிமக்கள் அணுகும்போது அவர்களுக்கு இணைய உபயோகத்திற்காக எவ்வித கட்டணமும் கிடையாது.
250 மெகா பைட் என்ற நுகர்விற்குப் பிறகு, பயனாளிகளுக்கு குறைந்த கட்டண மீள்நிரப்புதல் (Top up) திட்டங்களை அரசு கொடுக்கின்றது.