TNPSC Thervupettagam

புவிசார் குறியீட்டிற்கான முத்திரை மற்றும் வாசகம்

August 4 , 2018 2180 days 653 0
  • வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை புவிசார் குறியீடு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு மூவர்ணக் கொடி முத்திரையை வெளியிட்டுள்ளது.
  • இந்த முத்திரை “வியக்கத்தகு இந்தியாவின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்” என்ற வாசகத்தை அதன் அடியில் அச்சிடப்பட்டு கொண்டிருக்கின்றது.
  • ஒரு திறந்தவெளிப் போட்டியில், வெற்றிக்கான முத்திரை அதிரி சாட்டர்ஜி என்பவராலும், வெற்றிக்கான வாக்கியம் அகான்சா திரிபாதி என்பவராலும் வடிவமைக்கப்பட்டது.
  • புவிசார் குறியீட்டிற்கான முத்திரையையும் வாசகத்தையும் தேர்ந்தெடுத்தற்கான நோக்கம் யாதெனில் அறிவுசார் சொத்துரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதும், நாட்டில் புவிசார் குறியீடு கொண்ட பொருட்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துவதும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்