புவித் தகவல் மையத்தை அடிப்படையாகக் கொண்ட ஆளில்லா விமானம் மூலமான வரைபடமிடல்
November 22 , 2017 2560 days 898 0
சென்னை மாநகராட்சி, ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் அதன் சேவைகளையும் தனியார் சொத்துகளையும் வரைபடமிடுவதற்கான திட்டத்தை புவித்தகவல் அமைப்பை அடிப்படையாக் கொண்டு ஆரம்பித்துள்ளது.
இவற்றில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் என்பது ஆளில்லா தானியங்கி விமானங்கள் என அழைக்கப்படும்.
செயற்கைக் கோள் புகைப்படங்களை போலன்றி, விமானங்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் குறைந்த உயரத்தில் 60 மீட்டர் உயர அளவிலிருந்து பொருட்களை மாநகராட்சிக்கு அடையாளம் காண உதவும்.
அதன் மூலம் 5 சென்டிமீட்டர் அளவிற்கு துல்லியமான, உயர்தரத்தில் அமைந்த தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.
விரிவான டிஜிட்டல் வரைபடமிடலும், புவித் தகவல் அமைப்பு முறையிலான வரைபடமிடலும் மாநகர வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.
இதில் உள்ள முப்பரிமாண முறையானது கட்டுமானத்தின் இயல்பைப் பற்றிய சரியான தகவல்களை கொடுக்கும்.
இந்த வரைபடமிடலின் முக்கிய நோக்கம் கட்டிடங்களை குறைந்த அளவில் மதிப்பிட்டுக்காட்டி வரி குறைவாக வசூலிக்கப்படுவதை தடுத்து முறையான சொத்து வரி வசூலின் மூலம் வரி வருவாயை அதிகப்படுத்துவது ஆகும்.