புவியின் இயற்கை வளங்கள் அனைத்தும் தீரும் நாள் 2023 - ஆகஸ்ட் 02
August 6 , 2023 479 days 414 0
ஆகஸ்ட் 02 ஆம் தேதியானது 2023 ஆம் ஆண்டிற்கான புவியின் இயற்கை வளங்கள் அனைத்தும் தீரும் நாளினைக் குறிக்கிறது.
இது ஒவ்வோர் ஆண்டும், புவியானது ஓர் ஆண்டில் இயற்கையாகவே மீளுருவாக்கும் வளங்களை விட அதிகமான இயற்கை வளங்களை மனிதர்கள் பயன்படுத்தும் தேதி ஆகும்.
ஒவ்வோர் ஆண்டும், இலாப நோக்கற்ற உலக கரிமத் தாக்க வலையமைப்பு ஆனது சுற்றுச்சூழல் வளங்களுக்கான வழங்கல் மற்றும் தேவையைக் கணக்கிடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தரவைப் பயன்படுத்துகிறது.
புவியின் இயற்கை வளங்கள் அனைத்தும் தீரும் நாள் ஆனது 1971 ஆம் ஆண்டில் முதல் முறையாக கணக்கிடப்ப ட்டது.
அப்போது அத்தினம் அந்த ஆண்டின் டிசம்பர் 25 ஆம் தேதியாக மதிப்பிடப்பட்டது.