TNPSC Thervupettagam

புவியின் உட் கருவத்தின் இயக்கவியல்

February 20 , 2025 2 days 33 0
  • புவியின் உட்கருவமானது அதன் திரவ வெளிக் கருவத்துடனான அதன் எல்லையில் சிதைவடைகிறது என்பதற்கான சில ஆதாரங்கள் சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப் பட்டு ள்ளது.
  • புவியின் உட்கருவத்தின் தநனிச்சையான சுழற்சியின் ஒரு வேகமானது குறைவதாகத் தோன்றுகிறது.
  • புவியின் இந்த உட்கருவமானது சுமார் 1,500 மைல்கள் அகலமுள்ள ஒரு சூடான, மிகப் பெரும்பாலும் திடமான இரும்பு கோளம் ஆகும்.
  • உட்கருவத்தின் அருகிலுள்ள மேற்பரப்பின் கட்டமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
  • இந்த மாற்றங்கள் ஆனது அதன் சுழற்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் மற்றும் ஒரு நாளின் நீளத்தின் மீது கூட தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும்.
  • உள் மற்றும் வெளிப்புறக் கருவங்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆனது, இந்த மாற்றங்களுக்கான ஓர் உந்து சக்தியாக இருப்பதாக நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்