ஒளிச்சேர்க்கையின் தோற்றம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் பண்டைய நுண்ணிய தைலகாய்டு கட்டமைப்புகளை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த சிறிய புதைபடிவங்கள் என்பவை பழங்காலப் பாறை அமைப்புகளுக்குள் இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப் பட்டிருந்தன.
இந்த உயிரியல் கட்டமைப்புகள் ஆனது, புதைபடிவ வடிவத்தில் பாதுகாக்கப்பட்ட சயனோபாக்டீரியாவின் எச்சங்களாகும் என்பதோடு அவை சுமார் 1.75 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவையாகும்.
பூமியில் இன்று வரை பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான ஒளிச்சேர்க்கை சான்று இதுவாகும்.
சயனோபாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை செய்யும் நுண்ணிய உயிரினங்கள் ஆகும்.
தைலகாய்டுகள் குளோரோபிளாஸ்டின் உட்புறச் சவ்வுக்குள் இணைக்கப்பட்ட வட்டு வடிவ பைகள் ஆகும்.
சயனோபாக்டீரியாவில் ஆக்ஸிஜன் ஒளிச்சேர்க்கை செயல்பாடு நிகழ்வதற்கு அவை அவசியமாகும்.