TNPSC Thervupettagam

புவியின் நில அதிர்வு ஒலி

April 15 , 2020 1689 days 775 0
  • பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரானா  வைரஸ் முடக்கத்தினிடையே புவியின் நில அதிர்வு ஒலி மற்றும் அதிர்வுகள் மாற்றம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர்.
  • புவியியலில், நில அதிர்வு ஒலி என்பது பல்வேறு நில அதிர்வுகளின் காரணமாக நிலமானது தொடர்ச்சியாக அதிர்வதைக் குறிக்கின்றது.
  • இந்த ஒலியானது போக்குவரத்து மற்றும் தொழிற்சாலை உற்பத்தி போன்ற மனித நடவடிக்கைகளினால் ஏற்படும்  அதிர்வுகளைக் கொண்டுள்ளது.
  • இது சீஸ்மோ மீட்டர் அல்லது நிலநடுக்க மானியினால் பதிவு செய்யப்பட்ட சமிக்ஞைகளின் தேவையற்ற கூறாகும்.
  • சீஸ்மோ மீட்டரானது நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் எரிமலை சிதறுதல் ஆகியவற்றினால் ஏற்படும் நில நடுக்க இயக்கங்களைப் பதிவு செய்கின்றது.
  • நில அதிர்வு செயல்பாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்வதற்காக, புவியியலாளர்கள் தங்களது கண்டறிதல் சாதனங்களை புவியின் மேற்பரப்பிற்குக் கீழ் 100 மீட்டர் ஆழத்தில் பொருத்துகின்றனர்.
  • நாடு முடக்கத்திலிருந்து இதுவரை, புவியின் மேற்புறப் பதிவுகளிலிருந்தே இயற்கை அதிர்வுகளை  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய சாத்தியப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்