TNPSC Thervupettagam

புவியியல் சாராத சிற்றினத் தோற்ற வழிமுறைகள்

June 5 , 2024 43 days 174 0
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், அதே பகுதியில் புதிய உயிரினங்களின் உருவாக்கத்தில் சுற்றுச்சூழல் வளங்கள், மரபணுக்கள் மற்றும் பல்வேறு இனங்களில் இனச்சேர்க்கை ஆகியவற்றின் பங்கைக் கண்டறிந்துள்ளனர்.
  • தனித்துவமானப் புவியியல் பகுதிகளில் மட்டுமே புதிய இனங்கள் உருவாக முடியும் என்ற பாரம்பரியக் கண்ணோட்டத்திற்கு இது சவால் விடுக்கிறது.
  • இனவிருத்தி (சிற்றினத் தோற்றம்) அல்லது புதிய இனங்களின் உருவாக்கம், அமைப்பு ரீதியான தடைகள் இல்லாவிட்டாலும் கூட நிகழ்வதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மலைகள் அல்லது நீர்நிலைகள் போன்ற அமைப்பு சார்ந்த தடைகள் மக்கள் தொகையைப் பிரிந்து புதிய உயிரினங்கள் உருவாகுவதே வேற்றிடவழிச் சிற்றினத் தோற்றம் ஆகும்.
  • இதற்கு நேர்மாறாக, அத்தகையத் தடைகள் இல்லாத அதே பகுதிகளில் இணையுயிரி சிற்றினத் தோற்றம் நிகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்