2018 ஆண்டின் புவி நுண்ணறிவு ஆசியா (Geo-Intelligence Asia 2018) நிகழ்ச்சியின் 11-வது பதிப்பு புது தில்லியில் உள்ள மனேக்சா மையத்தில் நடைபெற்றுள்ளது.
புவி நுண்ணறிவு ஆசியா நிகழ்ச்சியின் கருத்துரு “புவி நிலப்பரப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கான ஓர் படைப் பெருக்கி” (GeoSpatial: A Force Multiplier for Defense and Internal Security).
இந்நிகழ்ச்சியின் நோக்கம் புவியிடத் தொழில்நுட்பங்களின் (Geospatial technologies) புத்தாக்கப் பயன்பாடுகளைக் காட்சிப்படுத்துவதற்கு ஓர் மேடையை வழங்குவதாகும்.
இந்த நிகழ்ச்சியானது ஜியோ-ஸ்பேடியல் மீடியா மற்றும் கம்யூனிகேஷன் (GeoSpatial Media and Communication) எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.
தகவல் அமைப்பிற்கான பொது இயக்குனரகம்
(Directorate General of Information System) இந்நிகழ்ச்சியின் அறிவுசார் பங்களிப்பாளராகும் (Knowledge Partners). இராணுவ கணக்காய்வு அமைப்பு (Military Survey) இந்நிகழ்ச்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகும்.